பாடம் சொல்லி தருவதாக அயல் வீட்டு சிறுமியை வீட்டுக்கு அழைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஓய்வு பெற்ற ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான 72 வயதான முதியவர் முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தனிமையில் வசித்து வருகின்றார்.
அந்நிலையில் அயல் வீட்டை சேர்ந்த 7 வயதுடைய சிறுமிக்கு பாடம் சொல்லி தருவதாக தான் வசித்த வீட்டுக்கு அழைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் , பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள்.
தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆசிரியரை கைது செய்ததுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்