Home Jaffna News பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்

பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 05/06/2021, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
Next article5 ஆயிரம் ரூபா நிவாரணம் கேட்டு கிராம சேவகரை கத்தியால் தாக்க முயன்ற பெண்ணொருவர் கைது!