Home Jaffna News யாழ்.பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் இடம்பெற்ற பல மோசடிகள், முறைகேடுகள் கணக்காய்வில் அம்பலம்..!

யாழ்.பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் இடம்பெற்ற பல மோசடிகள், முறைகேடுகள் கணக்காய்வில் அம்பலம்..!

யாழ்.பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண உள்ளக கணக்காய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

24. 4. 2020 ஆம் திகதியிலிருந்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வைத்தியசாலையில் 22 வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதும்10 வேலைத் திட்டங்களுக்கு மட்டுமே வடமாகாண பிரதம செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒப்பந்த கோவைகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் சான்றுப் படுத்தப்பட்ட வேலை நிறைவேற்று அறிக்கை கணக்காய்வு குழுவினால் கோரப்பட்டபோதும் அது சமர்ப்பிக்கப்படாமையினால் குறித்த வேலை தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ள முடியாதுபோனதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில்

09.12.2020 பிரதம செயலாளரினால் அனுமதிக்கப்பட்டதின் பிரகாரம் குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

எனினும் குறித்த வைத்தியசாலையில் நிர்மான வேலைகளுக்காக அரசசேவை சாராத உத்தியோகத்தர் ஒருவரை பணிக்கு அமர்த்தி மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் ஊதியம் வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

துரித அபிவிருத்தித் திட்டத்தின் நடை முறைப்படுத்தப்பட்ட 22 வேலைத்திட்டங்களில் இரண்டு வேலைத்திட்டங்கள் வைத்தியசாலை முகாமைத்துவ குழுவினரின் பெறுகை ஒழுங்கு விதிக்கு முரணாக வழங்கியமை கண்டறியப்பட்டது.

2020 ஆம் ஆண்டு வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் கிடைக்கப்பெற்ற 210 மெத்தைகள் கணக்காய்வு தினமான 10. 02.2021 ஆண்டு வரை ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்த நிலையிலும் வைத்தியசாலை சொத்துப் பதிவேட்டில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் வைத்தியசாலையில் இடம்பெற்ற செலவினங்களுக்கு சிட்டை தயாரிக்கபடாமல் சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கிய பற்றுச்சீட்டு மட்டும் கணக்காய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் வைத்தியசாலையின் முகாமைத்துவக் குழுக்கென உருவாக்கப்பட்ட யாப்பு அதன் சட்டநீதியான வலுவை கணக்காய்வு செய்யப்பட்ட தினம் வரை உறுதி செய்யவில்லை போன்ற பல விடயங்களை மேற்கோள்காட்டி மாகாண பிரதம உள்ளக கணக்காய்வு அலுவலகத்தினால் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் .

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்-தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 வயது சிறுமி..! வீட்டிலிருந்து 6 கிலோ மீற்றருக்கு அப்பால் மீட்பு..
Next articleநிறைபோதையில் வந்த தந்தை 5 வயது மகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! கை முறிந்த நிலையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி