பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2016இற்கு முன்னர் நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
இது தொடர்பில் பிரதம நீதியரசர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், விசாரணைக்கு காத்திருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குற்றச்சாட்டுகள் இல்லை என்றால், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பில் நாம் கருத்து கூற முடியாது.
அதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்திருத்தும் பணி இப்போது நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.