Home மட்டக்களப்பு செய்திகள் பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சையடி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறிலிருந்து இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பனிச்சையடி,ஆட்டுப்பண்ணை வீதியில் உள்ள பாழடைந்த காணியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த கிணற்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் அப்பகுதியில் முந்திரிகை பழம் பறிக்கச்சென்ற போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்து கிணற்றை சென்று பார்வையிட்டபோது அங்கு சடலம் கிடப்பதை கண்டு கொக்குவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற கொக்குவில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலமான சிதைவடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு முன்பாக குறித்த நபர் இறந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு பனிச்சையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஏழாலையில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இவர் சிக்கினர்! – அடகு வைத்த நகைகளும் மீட்பு!
Next articleஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் மூன்றாண்டுகள்