பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!

புதிய காத்தான்குடி பரீட் நகர் வீதியிலுள்ள பலசரக்கு கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 160 லீற்றர் பெற்றோல் காத்தான்குடி பொலிஸாரால் இன்று (12) கைப்பற்றப்பட்டது.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜ் தலைமையில் சென்ற பொலிஸார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோலை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த கடை உரிமையாளர் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

பலசரக்கு விற்பனை நிலையத்தின் உரிமையாளரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பெற்றோலையும் கைது செய்யப்பட்ட நபரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது! பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..