Home Local news பணமோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

பணமோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெனிங் சந்தையில் கடைக்கான அறை ஒன்றை பெற்றுத் தருவதாகத் தெரிவித்தும் கனடாவில் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறியும் குறித்த சந்தேநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பணமோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!
சந்தேக நபர்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வத்தளை மற்றும் ஜா – எல ஆகிய பகுதிகளிலுள்ள நபர்களிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வெவ்வேறு நபர்களுடைய 98 போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இ சுமார் 20 இலட்சம் ரூபா பணம் என்பன குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கனேமுல்ல மற்றும் அத்துருகிரிய உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிளிநொச்சியில் இதுவரை 1400 தொற்றாளர்கள்; கர்ப்பிணித் தாய்மார்கள் 14, சிறுவர்கள் 52.
Next articleகொவிட் தொற்றால் 156 பேர் உயிரிழப்பு.