கம்பஹா மாவட்டம் மல்வானை பிரதேசத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு எனக் கூறப்படும் வீட்டின் மீது தீவைத்தது பொலிஸார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொலிஸாரே அந்த வீட்டுக்கு சென்று தீ வைத்தனர் வீடு அமைந்துள்ள பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் கூறியுள்ளனர். தீ வைக்கப்படும் போது மக்கள் எவரும் அங்கு இருக்கவில்லை எனவும் தீப்பற்றி எரிவதை பார்த்த பின்னரே மக்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
இது ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் எனவும் இதனை அனைவரும் புரிந்துக்கொண்டு அமைதியான சமூகத்திற்காக அணித்திரள வேண்டும் என சமூக செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது இன்று முற்பகல், பிரதேச மக்கள் சென்று தாக்குதல் நடத்தி , வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
வீடு அமைந்துள்ள தோட்டத்திற்குள் சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தீயிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මල්වානේ ගෙදරට ගිනි තියල තියෙන්නෙ පොලීසියෙන් කියල තමා ඒ පැත්තේ ඉන්න අය කියන්නේ. කවුරුත් ගේ ගිනි ගන්න වෙලාවෙ ඉදල නැ. ඒත් ගිනි ගන්නව දැකල තමා හැමෝම එතනට ඇවිල්ල තියෙන්නේ. මේක මෙයාගෙ ප්ලෑන් එකක්. තේරුම් ගන්න දැන්වත්❗️❗️
සාමකාමී සමාජයක් උදෙසා පෙලගැසෙමූ..! ? pic.twitter.com/xFde6uDWF9
— Vihanga Landewaththa (@vihanger) May 10, 2022