கடந்த மாதம் 20 ம் திகதி பசறை பகுதியில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் லொறியின் சாரதியும் பேருந்தின் சாரதியும் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இன்றைய தினம் 01/04 பசறை நீதிவான் நீதிமன்றத்தில் பேருந்தின் சாரதியும் லொறியின் சாரதியும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது பேருந்தின் சாரதியை 08/04/2021 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
அத்துடன் லொறியின் சாரதியை ஐந்து லட்சம் ரூபாய் இரண்டு சரீர பிணைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் போது பேருந்து சாரதியின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த போதிலும் அவர் மீது புலன் விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பேருந்து விபத்தில் 14 பேர்கள் உயிரிழந்ததோடு 32 பேர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி ராமு தனராஜா
பசறை பஸ் விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு அனுமதிப்பத்திரம் கூட இல்லை: வெளியானது தகவல்
இந்நிலையில் குறித்த சாரதி, பஸ் அட்டவணையை பின்பற்றாத நிலையில் செயல்பட்டமை,பொறுப்பற்ற நிலையில் பஸ்ஸை கடும் வேகத்தில் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார்.
இதன்போது அந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலுமொரு மோசடி குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.
குறித்த பஸ் சாரதி, பிறிதொரு சாரதியின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியே, விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன், அவர் பிறிதொருவரின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்ட காலமாக சாரதியாக செயல்பட்டு வந்தமை குறித்த தகவல்களும், வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அத்துடன் குறித்த சாரதிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை, முன்னெடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.