Home sports நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கம்பீர் கொடுத்த...

நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் கே.எல் ராகுல் எளிதான கேட்சை கோட்டை விட்டது அணியின் மெண்டார் கவுதம் கம்பீருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் 2 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் மோஷின் கான் பந்துவீச்சை தூக்கி அடிக்க பந்து லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் கையை நோக்கி சென்றது.

இந்த கேட்சை அவர் பிடித்துவிடுவார் என நினைத்த பெவிலியனில் இருந்த அந்த அணியின் மெண்டார் கவுதம் கம்பீர் கைதட்டினார்.

ஆனால் ராகுல் கேட்சை கோட்டை விட கம்பீர் ரியாக்‌ஷன் மாறியது. இதையடுத்து முகத்தை கோபமாக கைகளை வைத்து மூடி கொண்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தினேஷ் கார்த்திக் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?
Next articleஇன்றைய ராசிபலன் இதோ 26.05.2022!!