ஆர்ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜிக்கு வாய் கொஞ்சம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். காமெடி என்ற பெயரில் பல நடிகர்களை இவர் பங்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் மாஸ் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தை ஆர்ஜே பாலாஜி மறைமுகமாக கலாய்த்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இவர் மீது கொல வெறியில் உள்ளார்களாம்.
அதன்படி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஆர்ஜே பாலாஜி சில விஷயங்களை பேசினார்.
அவர் கூறியதாவது, “உதயநிதியை எனக்கு 12 வருஷமா தெரியும். ஒரு முறை அவர் நடிக்க வருவதற்கு முன்பு தயாரிப்பாளராக இருந்த சமயத்தில் நான் அவரிடம், “எப்படி நீங்க அந்த படத்தை தயாரிச்சீங்கனு? ” கேட்டேன். உடனே அவர் எனக்கும் அந்த டவுட் இருக்கு.
நானும் அந்த படத்தை எடுத்தவர் கிட்ட என்ன சார் படம் இவ்ளோ சுமாரா இருக்குனு கேட்டேன். அதுக்கு அவர் இன்னொரு படம் எடுக்கலாமானு கேட்டார். அய்யோ சாமி ஆள விடுங்கனு” கூறியதாக ஆர்ஜே பாலாஜி கூறினார்.
ஆர்ஜே பாலாஜி கூறுவதுபோல் உதயநிதி நடிக்க வருவதற்கு முன்பு தயாரித்த படங்கள் என்றால் அது குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு. ஆகிய படங்கள் தான். இதில் தோல்வி படம் என்றால் குருவி தான். எனவே நிச்சயம் ஆர்ஜே பாலாஜி குருவி படத்தை தான் கிண்டல் செய்திருப்பார் என அவர் மீது விஜய் ரசிகர்கள் கொல வெறியில் உள்ளனர்.
போற போக்குல நம்ம அண்ணாவ தான் அசலாட்டா அடிக்கிறாங்க இதுல அந்த படத்தை #KGF தமிழ. வெர்சன் வேற அண்ணா ஆர்மி உருட்டுறாங்க படத்தோட ஒனர் சொல்லிட்டான் இதெல்லாம் ஒரு படமானு …… pic.twitter.com/EUZLgeBtfa
— Joe Selva (@joe_selva1) May 10, 2022