கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் என, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளாரென்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்துக்கு வருகைத் தருபவர்களுக்கு எழுமாறான என்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளதென்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.