எச் வினோத் ஏகே61 உடன் அஜித்தின் மூன்றாவது கூட்டணி விரைவில் தொடங்க உள்ளது, மேலும் படத்திற்காக தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட்டைக் கட்டி வருகின்றனர்.
ஏகே 61 திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடினர். நடிகர் அஜித்திற்கு பிடித்தமான பைக் ஸ்டண்ட் காட்சிகள் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்று பெருமளவில் பேசப்பட்டது.
இதனையடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் 3வது முறையாக ஏகே 61 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் கை கோர்த்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு பேராசிரியர் கேரக்டராம். ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் அதிகமாக நடிக்கும் அஜித் தற்போது காலேஜ் பேராசிரியராக நடிக்க ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியர் கேரக்டரில் தளபதி விஜய் நடித்து அசத்தியிருப்பார்.
#AK61 – Shoot to begin this week/11th in a Mount road set erected in Hyd. #AjithKumar to join in shoot after two weeks.
Buzz is that #AjithKumar is acting as a Professor in the film & #Kavin as his student.🔥 Expecting some brilliant heist ideas from the professor #AK 🌟 ©CV 🤝 pic.twitter.com/5fQBYR4d7z
— Laxmi Kanth (@iammoviebuff007) April 5, 2022
இந்நிலையில் தல அஜித்தையும் இந்த கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் வளர்ந்துவரும் இன்னொரு நடிகர் இடம்பெற்றுள்ளார். சீரியல்களில் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர் கவின். இவர் தற்போது நடிகர் அஜித்துடன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இவர் மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் கவின் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான லிப்ட் படத்தில நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது தல அஜித் கேரளாவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டார்.
அப்போது வெளியிடப்பட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே ஏகே 61 திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி ஸ்டண்ட் இயக்குனராக உருவெடுத்திருப்பவர் திலீப் சுப்பராயன். பல ஹீரோக்களின் ஃபேவரைட் மாஸ்டர் அவர்தான். சமீபகாலமாக அஜித்தின் திரைப்படங்களுக்கு அவர்தான் சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார்.
விஸ்வாசம் படத்தில் கூட அவர்தான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தார். அவரை பிடித்துப்போனதால் வலிமை படத்திற்கும் அவரையே வினோத்திடம் பரிந்துரைத்தார் அஜித். எனவே, வினோத்தும் ஒப்புக்கொண்டார். வலிமை படம் வெளியான பின் அப்படத்தின் ஆக்ஷன் கட்சிகள் மட்டுமே நன்றாக இருப்பதாக எல்லோரும் கொண்டாடி தீர்க்க இது ஹெச்.வினோத்தின் ஈகோவை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதோடு, படப்பிடிப்பு தளத்திலும் இருவருக்கும் முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே, வினோத் அடுத்து அஜித்தை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் திலீப் சுப்பராயனை ஒதுக்கிவிட்டு சுப்ரீம் சுந்தர் எனும் ஸ்டண்ட் இயக்குனரை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ஹெச்.வினோத்.
வலிமை திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றதால், இப்படத்தில் யார் பணி புரிய வேண்டும் என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என அஜித் வினோத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டதால் வினோத் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
ஏகே61 பேனரின் பேனரின் கீழ் போனி கபூர் தயாரிக்கிறார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சரவணன் மீனாட்சி புகழ் கவின் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.