Home Accident News நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் எரிபொருள் பவுஸர் மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் மரணம் !...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் எரிபொருள் பவுஸர் மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் மரணம் ! ஐவர் வைத்தியசாலையில் !

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றுடன் எரிபொருள் பவுஸர் ஒன்று இன்று (05) அதிகாலை மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் 5 இராணுவத்தினர் மஹவ மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதெனிய – அனுராபுரம் வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் விஷ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பவுஸர் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பவுஸர் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் பவுஸரில் கஞ்சா கடத்தல் – மூவர் கைது
Next articleயாழில் கொடுத்த கடனை திருப்பி கேட்க போனவர் மீது கொலைவெறி தாக்குதல்