Home வவுனியா செய்திகள் நிறுத்தாது சென்ற பேருந்து மீது கல் வீசிய யுவதி!

நிறுத்தாது சென்ற பேருந்து மீது கல் வீசிய யுவதி!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் யுவதி வழிமறித்த போதும் பேருந்து நிறுத்தப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி நொருங்கியுள்ளது.

இந்நிலையில் பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி நகரில் வசிக்கும் 28வயது பெண் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!
READ MORE >>>  திருமணமான மறுநாளே நகை பணத்துடன் மனைவி ஓட்டம்; நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது;
Previous articleஎரிபொருள் நிலையத்தில் அடிவாங்கிய பொலிஸ்காரர்!
Next articleA9 வீதியை முடக்கிய யாழ்ப்பாண மக்கள்!