அம்பாறை – நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தின் சாரதி தூக்க கலக்கத்துடன் வாகனத்தினை செலுத்தியமையே இந்த விபத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.