Home Local news நிதியமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

நிதியமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

வைன் ஸ்டோர்ஸ், பியர் கேன்கள் மற்றும் போத்தல்களை விற்பனை செய்யும் அனுமதிபெற்ற மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி வரி திணைக்கள தகவல்கள் இதனைத் தெரிவித்தன.
எப்.எல். 4 மற்றும் எப்.எல். 22 பி ஆகிய அனுமதிப் பத்திரங்களைக் கொண்ட மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வழமையாக மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை நேற்று வெளியிடப்படாத நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உத்தியோகபூவமாக அறிவிப்பதிலிருந்து அதன் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி ஆணையாளர் ( சட்ட அமுலாக்கம் ) கபில குமாரசிங்க தவிர்ந்திருந்தார்.

மதுபான விற்பனையில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், நிதி அமைச்சின் இந்த உத்தரவு முறையான எழுத்துபூர்வமாக கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

இவ்வாறான பின்னணியிலேயே உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் இன்றி மதுபான விற்பனை நிலையங்கள் நேற்று மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியும், முப்படைகளின் அலுவலக பதில் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்ர சில்வா, மதுபான விற்பனை நிலையங்களை திறக்க எந்த அனுமதியும் இல்லை என தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் செயலணிக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ நிபந்தனைகளுடன் மதுபானசாலைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு ஊரடங்கு காலத்தில் மது விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி பதிலளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாடளாவிய ரீதியில், பெரும்பாலான இடங்களில் மது விற்பனை நிலையங்கள் உத்தியோகபூவமற்ற ரீதியில் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய திறக்கப்பட்டுள்ளன. அதனால் பல மது விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள், மது கொள்வனவு செய்ய காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசிறைச்சாலை CCTV மாயம்!
Next articleநகைப் பிரியர்களுக்கு நல்லதொரு செய்தி;