நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொலிசாருக்கும் வழங்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த மே12 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது.

இதில் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மே 16ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் இலங்கை தமிழரசு கட்சி பிரதேச கிளையினரால் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வீதியால் வாகனத்தில் சென்ற பொலிசாரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..