தனது செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்த 61 வயதான பெண்ணொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (09) உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் என்ற 3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.