Home Local news நாட்டில் 94 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு; 2,956 பேர் தொற்றுடன் அடையாளம்

நாட்டில் 94 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு; 2,956 பேர் தொற்றுடன் அடையாளம்

நாட்டில் மேலும் 94 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் இன்று 2 ஆயிரத்து 956 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் நாட்டில் 31 ஆயிரத்து 620 பேர் மருத்துவமனைகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

69 ஆண்களும் 25 பெண்களும் இவ்வாறு கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 994 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.பண்ணைப் பாலத்திலிருந்து தவறி வீழ்ந்தவரைக் காணவில்லை
Next articleலொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தம்பதியினர் படுகாயம்