Home Local news நாடு தழுவிய முடக்கல் தொடர்பாக; இராணுவ தளபதி.

நாடு தழுவிய முடக்கல் தொடர்பாக; இராணுவ தளபதி.

நாட்டில் நிலவி வரும் கோவிட் – 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய முடக்கல் தொடர்பாக; இராணுவ தளபதி.

அத்துடன் பொதுக் கூட்டங்களில் கூடுபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ஜெனரல் சில்வா கூறியுள்ளார்.

மேலும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதுடன், வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇதுவரையான கொவிட் தொற்றாளர்கள் 324,221; உயிரிழந்தோர் 4821 ஆக அதிகரிப்பு.
Next article“கொரோனா தொற்று அதிகரிக்கிறது” எனினும் நாட்டை முடக்கும் இயலுமை இல்லை; ஜனாதிபதி