சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து, சபையில் உரையாற்றிய போதே ரணில் விக்ரசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியலமைப்பின் பிரகாரம், செயற்படுவது அவசியம் என அவர் தெரிவிக்கின்றார்.
நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என கூறிய அவர், அது பாரிய தவறான விடயம் எனவும் குறிப்பிடுகின்றார்.