தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித் குமார் தற்பொழுது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார்.படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 30% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இப்படப்பிடிப்புத் தொடங்கியும் படத்தில் நடிப்போரின் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, AK61 படத்திற்கான இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து முடித்துள்ளாராம். பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்த வாறு அமைந்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருவதைக் காணலாம்.
ஆனால் ஜிப்ரான் தான் இப்படத்திற்கு இசையமைக்கப் போகின்றார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு மாத்திரம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SaloonUpdate#AK61 – #Veera On Board ?
One Of The Most Talented Actor?
He is Well Known For #Rajathandhiram & #NadunisiNaaygal ??
He Will be Playing a Important Role??#AK61 Cast Till Now #AjithKumar – #ManjuWarrier – #Kokken – #Veera#Ghibran – #HVinoth pic.twitter.com/ahvdX5yI6F— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 9, 2022
இந்த நிலையில்AK ‘61’ படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான்:
‘என்னை தோற்கடிக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான் டா முடிவு செய்யணும்’ என்பது தான் அந்த பஞ்ச் டயலாக். படிக்கும் போதே மாஸ் ஆக இருக்கும் இந்த டயலாக், அஜித் பேசும்போது திரையரங்கத்தில் கேட்டால், என்ன ஆகுமென்று, நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை..!