Home Local news நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை – குவிக்கப்பட்ட படையினர்

நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை – குவிக்கப்பட்ட படையினர்

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுக்கும் இப் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகோட்டாபயவுக்கு ஆதரவாக கொழும்பில் தேசிய கொடிகளுடன் பேரணி
Next articleஇந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது-இவர்களின் பின்னணி என்ன!