இன்று (05) நள்ளிரவு 12.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாக இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.