Home Jaffna News நள்ளிரவில் பெண் தாதிக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்!! ஆண் தாதி சிக்கினார்

நள்ளிரவில் பெண் தாதிக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்!! ஆண் தாதி சிக்கினார்

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதி ஒருவருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் ஆண் தாதியே என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

கடந்த 8ம் திகதி பெண் தாதி ஒருவர் இரவு கடமையில் இருந்த நிலையில் நள்ளிரவு வேளையில் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் தாதி சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கு முறைப்பாடு வழங்கியதுடன், சாவகச்சோி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய புலன் விசாரணையில் கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் தாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக நிர்வாக மட்டத்திலான விசாரணை நடத்துமாறும், அதன் அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்கும்படியும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வைத்தியசாலை அத்தியட்சகரை பணித்திருக்கின்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்; தாய் மகன் காயம்.
READ MORE >>>  தமிழர் பகுதிகளில் தொடரும் கொடூரங்கள்!
Previous articleவீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இளைஞர்கள் மீது தாக்குதல்..! இருவர் காயம், யாழ்.சாவகச்சோியில் சம்பவம்
Next article20 வயது மனைவி மீது சந்தேகம்?? கழுத்தை நெரித்து கொன்ற 30 வயது கணவன்!!