யாழ்பாணம் நல்லூர் அரசடியில் நேற்று இரவு 7.00 மணியளவில் 7க்கு மேற்பட்ட மோட்டார் வாகனத்தில் வந்த நாயர்மார்கட்டு பகுதியை சேர்ந்த சுந்தர் உட்பட அவர்களின் சகாக்கள் அடங்கிய குழு கூரிய ஆயுதங்களுடனும் இரும்புக்கம்பிகளுடனும் வந்து கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டு நின்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்
வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்படுவதை அறிந்த இளைஞர்களும் ஊர்மக்களும் ஒன்றுதிரண்டு அவர்களுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்டனர்.
வந்தவர்கள் செய்வதறியாது உடன் வந்தவர்களையும் கொண்டுவந்த ஆயுதங்களையும் விட்டு விட்டு தப்பி ஓடினர்
ஓடியவர்களை விரட்டி அடித்ததுடன் அவர்களில் ஒருவரும் அவர்களால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனமும்
பிடிக்கப் பட்டது
பிடிக்கப்பட் மோட்டார் வாகனம் முற்றாக அடித்து நொருக்கப்படதுடன்
பிடிக்கப்பட்ட இளைஞனை பொலிஸாரிடன் ஒப்படைக்க முயன்ற போதும் அவரின் பெற்றோர் நேரடியாக வந்து கேட்டுக் கொண்டதால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு திடீரென வந்த யாழ்பண பொலிஸார் வீதியில் நின்ற இளைஞர்களை சரமாரியாக தாக்க முற்பட்டதுடன் வாகனத்தை பாதுகாக்க ஒழுங்கை ஓரமாக நிறுத்தப்பட்டு நின்ற கரப்பந்தாட்டம் விளையடிக்கொண்டு நின்ற இளைஞர்கள் சிலரின் மோட்டர் வாகனத்தையும் பொலீஸார் பொலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கடந்த சில மாதங்களாக நாயர்மார்கட்டு சுந்தர் குழு தொடர்ந்தும் இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் நடந்தமுயற்சித்து கொண்டுவருகின்றனர் என தெரியப்படுகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்படி ஒரு சம்பவம் அதே இடத்தில் இடம்பெற்ற போதும் அரசடி இளைஞர்களால் அடித்து விரட்டபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இக்குழு மீது ஏற்கனவே குற்றதடுப்பு பிரிவில் வீட்டின் மீது வாள்களுடன் வந்து தாக்குதல் நடத்தியாக வழக்கு தொடரப்பட்டும் CCTV ஆதாரம் தெளிவாக வழங்கப்பட்டும் பொலிஸாரால்
இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பொலிஸாரின் இந்த செயற்பாடு அக் குழுவின் செயற்பாட்டை ஊக்குவிற்பது போல தெரிகின்றதாக வீதியில் நின்ற சிலர் தெரிவித்தனர்.