Home Cinema நடித்த நாலு படமும் படு தோல்வி !! மார்க்கெட்டை இழந்த நிலையில் பீஸ்ட் நடிகை...

நடித்த நாலு படமும் படு தோல்வி !! மார்க்கெட்டை இழந்த நிலையில் பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே !!

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கு திரையுலகம் மூலம் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே.

தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, சமீபகாலமாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்.ஆம், தெலுங்கில் அகில் நடித்து வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படம் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளிவந்த ராதே ஷ்யாம் படமும் மாபெரும் தோல்வியடைந்தது.அதன்பின், சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் சிரஞ்சீவி – ராம் சரண் இணைந்து நடித்த ஆர்ச்சரியா படங்களும் தோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில், தொடர் தோல்வியின் காரணமாக தற்போது நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளாராம்.

இதன்முலம் நடிகை பூஜா ஹெக்டே தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளாம் என்று எண்ணியுள்ளாராம்.

சம்பளத்தை குறைந்துகொண்டதன் காரணமாக இத்தனை தோல்வி படங்கள் கொடுத்தும், நடிகை பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் படத்திலும், ரன்வீர் சிங் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், தெலுங்கில் உருவாகவுள்ள மகேஷ் பாபு படத்தில், பவன் கல்யாண் படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதளபதி 66 படப்பிடிப்பை உறுதி செய்த சரத்குமார் வெளியான அப்டேட் இதோ !!
Next article‘டான்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஆர்.ஜே.விஜய் மற்றும் சிவாங்கி