நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய செயின்ற் செபஸ்டியன் தேவாலயத்திலிருந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம் வரையில் சிலுவை சுமந்து நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர் இந்த நடைபயணத்தை ஆரம்பித்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி இப்பயணத்தை ஜெஹான் அப்புஹாமி (Jehan Appuhami) ஆரம்பித்துள்ளார்.
2 நாட்கள் நடந்து 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அதன்பின் ஆர்ப்பாட்டக் களத்துக்கும் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.