Home Local news தொலைபேசி காதலன் தொடர்பை நிறுத்தினாராம்: மாடியிருந்து குதித்த 14 வயது மாணவி!

தொலைபேசி காதலன் தொடர்பை நிறுத்தினாராம்: மாடியிருந்து குதித்த 14 வயது மாணவி!

தொலைபேசி காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 14 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களின் முன், பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு, இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்கள் நீடித்த காதல் உறவை, சில தினங்களின் முன் இளைஞன் துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவி, அடுக்கு மாடி குடியிருக்கிலிருந்து தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகடன்களை மீளப்பெறும் போது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் !
Next articleகிணற்றுக்குள் வீழ்ந்த கர்ப்பிணி கிணற்றுக்குள்ளேயே குழந்தை பிரசவிப்பு