களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்துடன் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமானப்படைக்கு சொந்தமான மகிழுந்தானது களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாவும் களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.