Home CRIME NEWS தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை – காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை – காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை அடுத்து இந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் கல்தோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு வயது 32.

இந்த காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

138,000 ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 19ஆம் திகதி பனமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

ஓகஸ்ட் 24ஆம் திகதி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கட்டுவன காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சம் பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் செப்ரெம்பர் 08 ஆம் திகதி பனாமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைகள் அனைத்தையும் குறித்த காவல்துறை உத்தியோகத்தரே செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.ஆறுகால்மடத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு! வாள்கள், கசிப்புடன் ஒருவர் கைது..
Next articleநீதிமன்ற துப்பாக்கிசூடு – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை