தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தையிட்டியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் கலந்துகொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
மேலும் நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க , இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ அவர்கள், உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.