புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேவிபுரம் பகுதியில் தனிமையில் வசித்துவந்த வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்மணிமீது சராமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வயோதிப தந்தை மீது வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் அவர்களிடம் இருந்த நகைகள் மற்றம் பணங்கள் என்பன கொள்ளையர்களினால் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.
அதிகாலை வேளை வயோதிப தம்பதிகள் கிராம அமைப்புக்களின் உதவியுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.