தெருக்கடையில் ரோஸ்மில்க் குடித்த சிறுவனுக்கு விளையாடியபோது நேர்ந்த ஏற்பட்ட பரிதாபம் .

சென்னையில் தெருக்கடையில் ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் வசந்தகுமார் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கிக் குடித்துள்ளார். அதன் பின்னர் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.

தெருக்கடையில் ரோஸ்மில்க்

அப்போது, முருகானந்தம் என்பவர் வீட்டில் வைத்து தயாரிக்கும் ரோஸ் மில்க்யை கடைகளில் விற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதனை பெத்ராஜ் தனது கடையில் விற்று வந்த நிலையில் சிறுவன் அங்கு வாங்கி குடித்துள்ளார்.

அதன் பின்னர் ரோஸ்மில்க் மாதிரியை சேகரித்த பொலிஸார், அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தெருக்கடையில் ரோஸ்மில்க்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..