Home மலைநாட்டு செய்திகள் தென்னிலங்கையில் மாயமான சிறுமி யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு!

தென்னிலங்கையில் மாயமான சிறுமி யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு!

கண்டி- கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி- கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பில், ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர், சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை அவதானித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுமி கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் நாளை, நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தசிறுமி யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும், செல்லும் வழியில் தனது அலைபேசி செயலிழந்ததால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல், பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

14 வயது சிறுமி மாயம்: பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  புதிய நிதியமைச்சராகின்றார் பந்துல குணவர்தன?
READ MORE >>>  சுற்றுலா விடுதியொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவம் (PHOTOS)
Previous articleஇன்றைய ராசிபலன் – 14/06/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleகடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் மாயம்!