Home Cinema தூக்கில் பிணமாக தொங்கிய சீரியல் நடிகை! தற்கொலையா? – போலீஸார் விசாரணை!

தூக்கில் பிணமாக தொங்கிய சீரியல் நடிகை! தற்கொலையா? – போலீஸார் விசாரணை!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மேற்கு வங்கத்தில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகை தான் பல்லவி டே. இவர் கொல்கத்தா நகரில் கர்பா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவருடன் சாக்னிக் சக்ரவர்த்தி என்ற நபரும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பல்லவி டே கண்டறியப்பட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் பல்லவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருடன் வசித்த சாக்னிக் சக்ரவர்த்தியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீரியல் நடிகை உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூக்கில் பிணமாக தொங்கிய சீரியல் நடிகை! தற்கொலையா? – போலீஸார் விசாரணை!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர் விமர்சனம்
Next articleஇரவோடு இரவாக போனை ஸ்விச் ஆஃப் செய்து அப்ஸ்காண்ட் ஆன சிவகார்த்திகேயன்; நடந்து என்ன ? வைரலாகும் உண்மை தகவல் !