விஜய் சேதுபதியின் கடைசி படமான மணிகண்டனின் கடைசி விவசாயம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.
இதையடுத்து மாமனிதன், விக்ரம் ஆகிய படங்கள் வரும் மாதங்களில் வெளியாகவுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் (இந்தி படங்கள்), விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர், பொன்ராம் இயக்கிய படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நடித்த ‘ஹே சினாமிகா’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஹே சினாமிகா. பிருந்தா மாஸ்டர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிருந்தா – விஜய் சேதுபதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.