Home Local news துமிந்த சில்வாவிற்கு கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துமிந்த சில்வாவிற்கு கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையின் உயர்நீதிமன்றம் இது தொடர்பில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

2016, செப்டெம்பர் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் 2021, ஜூன் 24 ஆம் திகதியன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணையின் போதே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளது.

அத்துடன் துமிந்த சில்வாவுக்கு பயணத் தடை விதித்த நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றின் பாதுகாப்பில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வாவை உடன் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை சிறுமியின் உலக சாதனை
Next articleமன்னாரில் வாகனத்தில் பயணித்த இருவர் மர்மமாக உயிரிழப்பு!