Home திருகோணமலை செய்திகள் திருமலை வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; அலட்சியமாக இருக்கும் நிர்வாகம்.

திருமலை வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; அலட்சியமாக இருக்கும் நிர்வாகம்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் களம் 09 கொரோனா நோயாளிகளுக்கான களமாக இயங்கி வருகின்றது. இதில் 14 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

நேற்றைய தினம் (10) 54 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான கட்டில் வசதிகளோ குறைந்தபட்சம் அவர்கள் இருப்பதற்கான கதிரை வசதிகளோ அவர்கள் படுப்பதற்கான பாய் வசதிகளோ இதுவரைக்கும் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதைவிட கொரோனா நோயாளிகள் உணவு, குடிநீர் இன்றியும் மிகவும் அல்லல் படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலை வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; அலட்சியமாக இருக்கும் நிர்வாகம்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட மக்களின் நலன்கருதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பி.சி.ஆர் இயந்திரமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றார்கள். இதனால் பல தொற்றாளர்கள் பி.சி.ஆர் முடிவுகளுக்காக பல நாளாக காத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

திருமலை வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; அலட்சியமாக இருக்கும் நிர்வாகம்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரின் இந்த அலட்சியப்போக்கு கொரோனா நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பிற்கும், கொரோனா தொற்று அதிகரிப்பிற்கும் வாய்ப்பை வழங்கும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண? பல அமைச்சுக்களில் விரைவில் மாற்றம்!
Next articleவவுனியாவில் 19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு;