Home திருகோணமலை செய்திகள் திருமலையில் திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் சிக்கியது! 20க்கும் மேற்பட்ட கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

திருமலையில் திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் சிக்கியது! 20க்கும் மேற்பட்ட கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

திருகோணமலை உவர்மலை பகுதியில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் அண்மையில் திருகோணமலை தலைமைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களிடமிருந்து ஒருதொகை கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைத் தொலைபேசிகளையே திருடுவதை தொழிலாக கொண்டிருந்த இக்கும்பல் நீண்டகாலமாக உவர்மலை பகுதியில் சாதாரணமான முறையில் வீட்டுக்குள் நுழைந்து கைத் தொலைபேசிகளை திருடி வந்தது. அவற்றை தரகர் மூவமாக விற்று வந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. பொலிசார் கைது செய்தபோது 20 வரையிலான கைத் தொலைபேசிகளை அவர்கள் வைத்திருந்ததாகவும் அவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றுக்கான உரிமையாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிய வருகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பொலிசாரினால் திருகோணமலை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உங்களது கைத் தொலைபேசிகளும் திருடப்பட்டிருந்தால் திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

மற்றவர்களும் பயன்பெற இதை பகிர்ந்து உதவுங்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா? வெள்ளையாக்கும் சில எளிய வழிகள்!
Next articleசெயலமர்வில் கலந்துகொண்ட 168 பேரில் 22 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!