தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆடைத் தொழழிற்சாலையில் பணியாற்றும், 21 வயதான கே.ஜி.மதுஷிகா குமாரி ரத்நாயக்க என்பவரே கொல்லப்பட்டார்.
யுவதியும், கொலையாளியும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாதவர்கள் எனவும், சுமார் 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சுமார் 8 மாதங்களாக கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் வீடு திரும்பாததால், வீட்டுக்கு வர வேண்டாம் என யுவதி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று யுவதியை கொலை செய்துள்ளார்.
மீகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், அடம்ப ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய சந்தேக நபர், ஹிங்குராங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.