தமிழ் சினிமாவில் சிறந்த கதையை தனித்துவமனாக இயக்கத்தால் சிலிர்க்க வைத்தவர் கே பாக்யராஜ். பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து முலைத்த வேராக இருந்தவர் பாக்யராஜ். 1979ல் சுவரில்லாத சிற்பங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
இயக்குனர் மட்டுமில்லாது திரைக் கதையாசிரியர், நடிகர், இசை கம்போசர் என பன்முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் லெஜெண்ட் இயக்குனராக இருந்தார். சினிமாவில் காலெடி எடுத்து வைக்க முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை பிரவினா தான்.
இயக்குனர் ஆவதற்கு முன் கஷ்பட்டு இருந்த பாக்யராஜிடன் வீட்டிற்கே செல் என்று கூறியணிப்பி இருக்கிறார் பிரவீனா. அதன்பி, அல்சரால் சிகிச்சைக்காக சென்னை வந்த் போது அவருக்கு பாரதி ராஜாவுடன் 16 வயதினிலே படத்தில் இணைந்து இயக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் நடிகை பிரவீனாவை 1981ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அதன்பின் பிரவீனா மரணமடைந்த ஒரே ஆண்டில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்தார்.
தற்போது வரை பிரவீனாவை மறக்காத பாக்யராஜ், அவர் கொடுத்த மோதிரத்தையும் வைத்திருக்கிறார். மேலும் அவர் நினைவாக அவரின் புகைப்படத்தை பாக்யராஜின் அலுவலகத்தில் வைத்திருக்கிறார். தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பாக்யராஜ்.