திருமணம் முடிக்க மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியொருவரை 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி, சரமாரியாக வெட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்துக்குட்பட்ட தம்புள்ள பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தம்புள்ள பொலிஸார் இறங்கியுள்ளனர்.
குறித்த சிறுமி பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பிலேயே வாழ்ந்துவருகின்றார்.
வெட்டுக்காயங்களால் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 மணிநேரம் சத்திரசிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாத்தளை- மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், பதுளை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வசிக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு வந்திருந்தபோது இளைஞர், திருமணம் முடிக்கும் யோசனையை முனவைத்துள்ளார்.
அதன்பின்னர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளார். அதனை சிறுமி ஏற்க மறுத்ததால் முதலில் தலையில் உள்ள முடியை வெட்டியே பிறகு தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் தம்புள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.