Home Indian news திருமணத்திற்கு மறுத்த இளைஞனுக்கு அசிட் வீசிய 2 பிள்ளைகளின் தாயால் பரபரப்பு!

திருமணத்திற்கு மறுத்த இளைஞனுக்கு அசிட் வீசிய 2 பிள்ளைகளின் தாயால் பரபரப்பு!

இந்திய கேரளா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞனின் மீது 2 குழந்தைகளின் தாய் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35). ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த இளைஞன் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக பேஸ்புக்கில் பேசிவந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன்பின்பு அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளனர்.

இந்த நிலையில், ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.

ஷீபா

இதனால் ஆத்திரமடைந்த ஷீபா, அருண்குமாரை சமரசம் பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார். அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றுள்ளார். அடிமாலி சென்றதும் அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த அசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசியுள்ளார். இதில் அருண் குமாரின் முகத்தில் ஆசிட் பட்டு எரிந்தது. அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்துள்ளனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்

இச்சம்பவம் பற்றி அடிமாலி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அருண்குமார் பொலிஸாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது அசிட் வீசியதாகவும் கூறினார்.

இதையடுத்து பொலிஸார் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கெமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

கேரளாவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞனின் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபிரபல பாதாள உலகக் கோஷ்டி சுட்டுக் கொலை
Next articleபாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற காமுகனால் பதட்டம்