Home Local news திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி – ஆபத்தான நிலையில் காதலன்

திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி – ஆபத்தான நிலையில் காதலன்

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரணமடைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார்.

திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள் சிக்கியுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலை பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Next articleமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி விபத்து! சிறுமி பலி, இருவர் படுகாயம்