Home யாழ் செய்திகள் திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!

திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது என்று காவல்துறையினர் கூறினர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉக்ரைன் தளபதி வெளியிட்ட மிக உருக்கமான வீடியோ !! இதுவே எங்களின் கடைசி செய்தியாக இருக்கலாம்
Next articleஇன்றைய ராசிபலன் – 21/04/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்