திருகோணமலை லிங்க நகர் கடலில் சடலம் மீட்பு

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிங்க நகர் கடலில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைக்காக கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், சடலம் மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) எனவும் தெரியவருகின்றது.

குறித்த சடலத்தைத் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் தர்ஷினி அண்ணதுரை முன்னிலையில் குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர்.

மேலும் குறித்த சடலம் தொடர்பில் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

22 627Fb73A8E199 22 627Fb73A60E7B

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..