கொழும்பில் மகிந்த தரப்பினரின் கலவரத்தினை தொடர்ந்து நாடு பூராகவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவின் வீடும் நேற்று (09) மாலை தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.
திருகோணமலை கந்தளாயில் உள்ள அலுவலகம் வீடு என்பனவே இவ்வாறு மக்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இறுதியாக வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் நியமனத்தையும் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது