தற்போது எமது நாட்டில் Covid 19 தொற்று அதிகரித்து வருகின்றது, அதற்கமைய எமது பிரதேசத்திலும் (தோப்பூர், மல்லிகைத்தீவு, சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை எமது மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா மரணம் அண்மையில் நிகழ்ந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த புது வருடத்தினை முன்னிட்டு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகமான மக்கள் சொந்த இடங்களுக்கு வந்தமையினால் இந்த வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் முன்னைய தாக்கத்தை விட வீரியம் கூடியதாக இருப்பதை நாம் சமூக வளைத்தளங்களில் ஊடாக வயதெல்லை பாராமல் மக்கள் நடுவீதியில் மயங்கி மயங்கி கீழே விழுவதை காணக்கூடியதாக உள்ளது.
எனவே குறித்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முறையான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், பொது இடங்களிற்கு செல்வதை தவிர்த்தல், சமூக இடைவெளிகளை பேணுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பொது மக்கள் கடைப்பிடிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
மற்றும் அவசியத் தேவையின்றி வெளிப்பிரதேசங்களுக்கு பிரயாணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு, கூட்டமான இடங்களில் மற்றும் அலுவலகங்களில் முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு நாம் உங்களை கேட்டுக் கொள்கின்றோம்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது Antigen , PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தகவல் :
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
பொலிஸ் நிலையம்,
மூதுார்.